இடைநிற்றலை தவிர்க்க 10 முதல் பிளஸ் 2 மாணவருக்கான 'சிறப்பு கல்விஊக்கத் தொகை' கடந்த 3 ஆண்டுகளாகக கிடைக்கவில்லை என கலெக்டர்களிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.தமிழகத்தில் இடைநிற்றலை தவிர்க்க, அரசு 2010-2011ல் 'சிறப்பு கல்வி ஊக்கத்தொகைதிட்டத்தை' துவக்கியது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவருக்கு 3 ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக மாணவர்கள் வங்கி கணக்கு துவக்கினர். பணம் அனுப்பும் பணியை 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்தது. தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பெயர், வங்கி கணக்கு எண் விபரத்தை 'ஆன்லைனில்' அனுப்பினர். குளறுபடி:வங்கி கணக்கு விபரம் 2010 -2011ம் ஆண்டே அனுப்பியும், 2010-2011 முதல்2012 - 2013 வரையிலான 3 ஆண்டுக்கான சிறப்பு கல்வி ஊக்கத்தொகை இது வரை வரவில்லை. தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டால், வங்கி கணக்கு விபரம் அனுப்புவது மட்டுமே எங்கள் பணி. வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செல்வதால், எங்களுக்கு தெரியாது என்கின்றனர். 4ஆண்டுகள் ஆகியும் கல்வி ஊக்கத்தொகை 'கைக்கு' வரவில்லை என கலெக்டர்களிடம் மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.சிவகங்கை கலெக்டர் முனுசாமியிடம் புகார் அளித்த பின், மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.சுரேஷ்குமார் கூறும்போது: எங்கள் பள்ளியில் 2010-11 முதல் 2012-2013வரை படித்த 162 பேருக்கு கல்வி ஊக்கத் தொகை ரூ.11.34 லட்சம் வரை வரவில்லை. மாவட்ட அளவில் இப்பிரச்னை உள்ளது. தலைமை ஆசிரியர் உரிய பதில் தராததால், கலெக்டரிடம் புகார் அளித்தோம். அனைத்து மாவட்டத்திலும் மாணவர் பெருமன்றம் சார்பில், மாணவர்கள் கலெக்டரிடம் புகார் அளித்து வருகின்றனர், என்றார்.
கல்வி அதிகாரி பேட்டி:கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறும்போது: அரசு அவசர கதியில், மாணவர் வங்கி கணக்கு விபரம் கேட்டது. இதனால், அதிக மாணவர்கள் தங்கள் தாய், தந்தை, சகோதரர்களின் வங்கி கணக்கு எண்களை, தலைமை ஆசிரியரிடம் வழங்கி விட்டனர். 'ஜீரோ பேலன்ஸ்'ல் கணக்கு துவக்கிய மாணவர்களும் அதை செயல்பாட்டில் வைக்காததால், வங்கிகளே கணக்கை ரத்து செய்துள்ளன. எவ்வளவு மாணவருக்கு ஊக்கத்தொகை அனுப்பியுள்ளீர்கள்என்ற விபரம் கேட்டாலும், அரசு எங்களுக்கு வழங்குவதில்லை. இக்குளறுபடி காரணமாக ஏராளமான மாணவருக்கு கல்வி ஊக்கத்தொகை வரவில்லை. அரசு தான் உரிய தீர்வு காண வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி