தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11முதல் 21 வரை நடைபெற உள்ளன.1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அமலில் உள்ளதால், இந்தத் தேர்வுகள் மூன்றாம் பருவத் தேர்வுகளாக நடைபெற உள்ளன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கியது.பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளன.பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்தும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே முதல் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
10 வயதுடைய குழந்தைகளே தொடக்கபள்ளியில் படிக்கின்றனர் தற்போதே வெப்பதின் தாக்கம் அதிகம் ஆனால் அரசு தொடக்கபள்ளி
ReplyDeleteக்கே விடுமுறை தாமதமாக விடுகிறது
Saturday va exam start agum
ReplyDeleteSaturday va exam start agum
ReplyDeleteCorrect
ReplyDeleteCorrect
ReplyDelete