அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2015

அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை


அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. ஆனால் விடுமுறைவழங்குவது சார்பாக சில ஒன்றியங்களில் முரண்பாடு எழுந்துள்ளதால், தமிழக அரசுஅரசாணை வழங்கியும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொருளாளர் திரு.தே.அலெக்சாண்டர் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து மனு அளிக்க சென்றனர். ஆனால் இயக்குனர் தேர்வு பணியில் இருப்பதால், அவரின் தனி செயலாளரிடம் இதுகுறித்து வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக இயக்குனரிடம் கலந்து பேசி நெறிமுறைகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி