வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மார்ச் 7 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மார்ச் 7 கடைசி


திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களது பதிவை மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்தால், இம்மாதம் 7ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர் சித்திக் கூறியதாவது:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 2011, 2012மற்றும் 2013ஆம்ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு தமிழக அரசு புதுப்பித்தல் சலுகை வழங்கி உத்தர விட்டுள்ளது.இதன்படி இம்மாதம் 7ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, தவறிய நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை, இதரசான்றுகளுடன் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்து பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

1 comment:

  1. "எனது நெஞ்சம் நிறைந்த அன்பு சகாக்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்..! இதுவரை நாம் கடந்து வந்த பாதையில் இன்று நம்பத்தகுந்த நல்லசெய்தி கிடைத்துள்ளது. அதாவது இன்று காலை எழிலகம் வளாகத்தில் தமிழக அரசின் தலைமை ஆலோசகர் திருமதி. சாந்தா ஷீலா நாயர் IAS முன்னிலையில் இந்தாண்டிற்க்கான பழங்குடியினர் நலன் சார்ந்த திட்ட ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் திருமதி. கண்ணகி பாக்கியநாதன் IAS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த திட்ட ஆலோசனை கூட்டத்தில் "ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்"மானமிகு. அய்யா. கிறிஸ்துதாஸ் காந்தி IAS உட்பட மேலும் பல அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டு நாம் கடந்து வந்த போராட்ட பாதை, தற்போதுவரை தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் எடுத்து கூறி எங்களுக்கு உரிமையை பெற்றுத் தாருங்கள் என்று விவாதித்தோம். அதற்கு நமது நலத்துறையின் செயலாளர் அவர்கள் வருகின்ற புதன்கிழமை (11.03.15) அன்று உங்களுக்கு உரிய வழக்கு முடிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்..! எனவே நமது உரிமை விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை..! அதுவரை காத்திருப்போம்..! என்றென்றும் தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி