ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில், 943 அரசுப் பள்ளிகள் தலா ஓர் ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருகின்றன என்று மாநில முதல்வர் வீரபத்ர சிங் தெரிவித்தார்.இதுகுறித்த கேள்விக்கு, மாநில சட்டப்பேரவையில் வீரபத்ர சிங் அளித்த பதில்:
மாநிலத்தில் மொத்தம் 10,766 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 411பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 5-க்கு கீழே உள்ளது. இதைப்போல், 745 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 10-ஆக உள்ளது. 35 பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே படிக்கின்றனர்.இதில் 21 பள்ளிகள் ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுகின்றன. மொத்தமாக 1,136 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர் என வீரபத்ர சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி