அரியானா மாநில பள்ளி மாணவர்களுக்கு 'எலக்ட்ரானிக்' அடையாள அட்டை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2015

அரியானா மாநில பள்ளி மாணவர்களுக்கு 'எலக்ட்ரானிக்' அடையாள அட்டை


அரியானா மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் அடையாள அட்டை வழங்கும் திட்டம், அடுத்த மாதம் துவங்குகிறது.பா.ஜ.,வின் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆட்சி, அரியானா மாநிலத்தில் நடக்கிறது. பள்ளிக்கு, குழந்தைகள் சென்றார்களா என்பது குறித்த பெற்றோரின் கவலையை தீர்க்கும் வகையில், 'ராஹ் குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனம், புதிய மென்பொருளை தயாரித்து உள்ளது.
மாணவர்களுக்கு, இந்த மென்பொருள் பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரானிக் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை, பள்ளியில் உள்ள, ஜி.பி.ஆர்.எஸ்., வசதி கொண்ட சர்வருடன் இணைக்கப்படும். அடையாள அட்டையில்உள்ள, 'சிப்'பில், மாணவனின் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும். இதுபோன்று, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களிலும், ஜி.பி.ஆர்.எஸ்.,தொழில்நுட்ப வசதியுள்ள மென்பொரும் பதிவு செய்யப்படும்.

தான் செல்ல வேண்டிய பஸ்சில் மாணவன் ஏறியவுடன், அவனுடைய அடையாள அட்டை தானியங்கி முறையில், பஸ்சில்உள்ள மென்பொருளுடன் தொடர்பு கொண்டு, பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும். பள்ளியை சென்றடைந்தவுடன் மற்றொரு குறுந்தகவலும், தேர்வு மற்றும் வீட்டுப்பாடம் குறித்த தகவல்கள் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் சென்றடையும். தவறான பஸ்சில் மாணவன் ஏறினாலோ, பள்ளிக்கு வராமல் இருந்தாலோ, பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கு, தானியங்கி முறையில் எஸ்.எம்.எஸ்., வரும். இத்தகைய வசதிகள் கொண்ட எலக்ட்ரானிக் அடையாள அட்டையை, ஹிசார் மாவட்டத்தில் உள்ள, ஐந்து பள்ளிகளில், ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடைந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என்று, அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி