போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை : டிஆர்பி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2015

போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை : டிஆர்பி அறிவிப்பு


ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களில்ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

5 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் வெளியிட்டது.ஆனால் இந்த பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் எங்கும் கிடைப்பதில்லை என்று சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு எழுத உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இந்த போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் 15169 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் 5253 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கு போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடக்கும் என்றுஆசிரியர் தேர்வு ஆணையம்(டிஆர்பி) அறிவித்துள்ளது. ஓவியர்களுக்கான பாடத்திட்டம் குளறுபடியாக உள்ளது என்று முதல்வருக்கு மனு அளித்துள்ளோம். எனவே போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதனால் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ஓவியம், தையல், இசை, பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு மாநில பதிவு முன்னுரிமையை நடைமுறைப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராஜ்குமார் கேட்டுள்ளார். இந்த கோரிக்கை மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசாணை எண் 185ல் கூறப்பட்டுள்ளபடியே ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

38 comments:

  1. பாடத்திட்டம் குழப்பம் கலை ஆசிரியர்கள் தவிப்பு.

    ReplyDelete
  2. காலை வணக்கம் நன்பர்களே...

    ReplyDelete
  3. மதுரை நீதிமன்றத்தில் இன்று என்ன நடைபெறுகிறது?

    ReplyDelete
  4. இன்று வழக்கு நடைபெறவில்லையெனில் அடுத்து எப்போது?

    ReplyDelete
  5. மேலும் காலதாமதம் ஆகுமா?

    ReplyDelete
  6. செய்திதாள் தகவல் வக்கீழ்கள் கோர்ட் புறக்கணிப்பு

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. DRAWING NEW RE SYLLABUS A VELIYIDAVUM AND FIRST 16,549 PART TIMEINSTRUCTERS I REGULAR PANNAVUM .

    ReplyDelete
  9. SCHOOL TEACHERS RECRUITMENT - WRITTEN EXAM
    ADMINISTRATIVE JOB - WRITTEN EXAM
    CLERK - WRITTEN EXAM
    BANK - WRITTEN EXAM
    SPECIAL TEACHER - WRITTEN EXAM
    BUT.............
    ARTS COLLEGE LECTURERS - ONLY ORAL BUSINESS

    ReplyDelete
  10. Please update adw cause details....

    ReplyDelete
  11. Dear frnds adws case ennachi??pls update court news....

    ReplyDelete
  12. Tommorrow......case hearing....aha chance erugu....dnt worry

    ReplyDelete
  13. Stay calm bro's we'll succeeded...

    ReplyDelete
  14. மாலை வணக்கம்

    ReplyDelete
  15. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளானர்...தமிழகம், ஆந்திரா..உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.....புதிய தலைமுறைச் செய்தி.

    ReplyDelete
  16. Rajkumar..hari sir. Vanakkam how ru..

    ReplyDelete
  17. 2G valakku 19 am thethi kku otthivaikkappattullathu...

    ReplyDelete
  18. Naalai valaklu list la vanthaalum court nadaiperuma????????

    ReplyDelete
  19. Muni ssir nalai adw case hearing kanndippa varuma sollunga please

    ReplyDelete
  20. நாளை வழக்கு எண் WP.MD.16547/2014ஐ நீதிமன்றம் எண் 10ல் 7வது வழக்காக நீதிபதி திரு.ரவிச்சந்திரபாபு அவர்கள் விசாரிக்கவுள்ளார்.......

    ReplyDelete
  21. Thagavalykku nandri venkat sir. Nalai nalla thaval kodungal sir.

    ReplyDelete
  22. காலை வணக்கம்

    ReplyDelete
  23. Venkat sir adw case indru hearing thane. Enna case details sollunga

    ReplyDelete
  24. Next hearing April second week

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி