மின் கட்டண கூடுதல் வைப்பு கணக்கிடும் முறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2015

மின் கட்டண கூடுதல் வைப்பு கணக்கிடும் முறை


மின் கட்டண கூடுதல் வைப்புத் தொகையை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது; மின் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என ஆறு மாதங்கள் செலுத்திய மின் கட்டணத்தை 12 ஆல் வகுத்து அதில் வரும் தொகையை மூன்றால் பெருக்க வேண்டும்.
இவ்வாறு வரும் எண்ணை தனியாக வைத்துகொள்ள வேண்டும். பின், இருப்பில் உள்ள வைப்பு தொகைக்கு 9 சதவீதம் வட்டி சேர்த்து அதில் வரியை கழிக்க வேண்டும். இதில் ஒரு எண் கிடைக்கும். இதையடுத்து இரண்டு தனி எண்களையும் கழித்தால் வர கூடியது, கூடுதல் காப்பு வைப்பு தொகை. ஏற்கனவே உள்ள வைப்பு தொகையுடன் ஒப்பிடும்போது கூடுதல் வைப்பு தொகை குறைவாக இருந்தால் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை. இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொழிற்சாலைக்கு ஆண்டுதோறும்; குடியிருப்புக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. கூடுதல் வைப்பு தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற விவரம் மின் நுகர்வோரின் ஆண்டு மின் பயன்பாடுகணக்கின் அடிப்படையில் வசூல் செய்யப்படும்.

கூடுதல் காப்பு தொகை வசூலிக்கும்போது மின் பயன்பாடு அதிகரித்திருந்தால் கூடுதல் தொகை; மின் பயன்பாடு குறைந்திருந்தால் வைப்பு தொகை திரும்ப வழங்கப்படும். இதை மின் நுகர்வோர் மூன்று தவணைகளில் செலுத்தலாம். இந்த விவரம் மின் கட்டண மையங்களில்மின் கட்டணம் செலுத்தும்போது வழங்கப்படும் ரசீதில் தெரிவிக்கப்பட்டு ஏப்., மேமாதங்களில் கூடுதல் வைப்பு தொகை வசூல் செய்யப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி