தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு( 'ஜாக்டா' )அமைப்பு மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2015

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு( 'ஜாக்டா' )அமைப்பு மனு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பினர், அறிவித்துள்ள நிலையில், 'ஜாக்டா' அமைப்பினர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக் கமிஷன்படி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 கோரிக்கைகளை, நிறைவேற்றக்கோரி, 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், 18 ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான - ஜாக்டா அமைப்பு சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், தனியே மனு கொடுக்கப்பட்டுள்ளது.

*ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசில் பணிபுரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல், தமிழக அரசின் கீழ் பணிபுரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

*தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை,நடைமுறைப்படுத்திட வேண்டும்.

*தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட, அனைத்து நிலை ஆசிரியர்களையும், பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

'கோரிக்கை தொடர்பாக, நல்ல முடிவை அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். எங்கள் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான கூட்டம், வரும் 22ம் தேதி, சென்னையில் நடைபெறும்' என, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி