பதவி உயர்வு, தேர்வு நிலை தர ஊதிய உயர்வு உள்ளிட்ட, 15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்கல்வி ஆசிரியர்கள், கோட்டை நோக்கிப் பேரணி சென்றனர். நிதித்துறை செயலர் உதயசந்திரனிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில், தொழிற்கல்வி ஆசிரியர்கள், சென்னையில் நேற்று, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி சென்றனர். கழக பொதுச் செயலர் ஜனார்த்தனன் கூறும்போது, ''தொழிற்கல்விக்கே அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பு உள்ளதால், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வியை கட்டாயமாக்கி, உரிய முன்னுரிமை தரவேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து, போராட்டம் நடத்தினோம்,'' என்றார். ஆசிரியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, தொழிற்கல்வி ஆசிரியர்களின் போராட்டம் குறித்து, நிதித்துறைச் செயலர் உதயசந்திரனிடம் போலீசாரால் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஆசிரியர் கழக பிரதிநிதிகளை சந்தித்த அவர், 'போராட்டம் வேண்டுமா; போராடித் தான் மனு அளிக்க வேண்டுமா?' என கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியர்கள், 'நாங்கள் மனு அளிக்க பலமுறை இங்கு வந்துள்ளோம், பலமுறை மனுக்களும் அளித்துள்ளோம். அனைத்தும் கிடப்புக்குப் போய்விட்டன. அதனால் தான், போராட்டம் நடத்தினோம்' என, பதிலளித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி