ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2015

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு கலந்தாய்வு


ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நல இயக்குநர் எஸ்.சிவசண்முகராஜா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் 33 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டோருக்கு வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வில் பங்கேற்போர் உரிய சான்றுகளை எடுத்து வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி