இதே நாளில் அன்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2015

இதே நாளில் அன்று

ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்தில், பிரிட்டனிலிருந்து காலியாக வரும் கப்பல்களில், அடி பாரத்துக்காக உப்பு ஏற்றப்பட்டு வந்தது. 

அதை இந்தியாவில் விற்று பணமாக்க முயன்ற ஆங்கிலேயர்கள், உப்புக்கு விலையும், வரியும் நிர்ணயம் செய்து, பொதுமக்களுக்கு விற்றனர். 1814ம் ஆண்டு துவங்கி, 1919ம் ஆண்டுக்குள் உப்புக்கு வரி, 20 சதவீதமாக ஏறியது. இதையெல்லாம் கவனித்த காந்திஜி, உப்பு வரியை ஒழிக்கக்கோரி, வைஸ்ராய் இர்வினுக்கு கோரிக்கை வைத்தார்; அவர் செவி சாய்க்கவில்லை. எனவே, உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். கடந்த, 1930, மார்ச் 12ம் தேதி, 78 தொண்டர்களுடன், குஜராத் மாநிலம், ஆமதாபாத், சபர்மதி ஆசிரமத்திலிருந்து, தண்டி கடற்கரையில் உப்பு காய்ச்சுவதற்கு, 360 கி.மீ., நடைபயணமாக புறப்பட்டார். அப்போது அவருக்கு வயது, 61. ஏப்., 5ம் தேதி, யாத்திரை முடிந்தது.

நாடெங்கும் மக்கள் உப்பு காய்ச்சினர். இதைத் தடுக்க, அடக்குமுறையை அரசு தீவிரமாக கையாண்டது. காந்திஜி கைது செய்யப்பட்டார். அடுத்து, சரோஜினி தேவி தலைமை ஏற்றார். போராட்டம் வெடித்தது. விளைவாக, உப்பு வரி நீக்கப்பட்டது. காந்திஜியின் பெயரை, கிராமங்களிலும் அறிய வைத்த போராட்டம் இது!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி