பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளில் உள்ள ஏற்றத் தாழ்வை சரிசெய்ய சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. வங்கிகளின் வர்த்தக யுக்தியை மாற்றியமைக்குமாறு அவற்றின் இயக்குனர் வாரியங்களை நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இருதரப்புக்கும் நலம் பயக்கும் வகையில் வங்கிகளை இணைப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கென தன்னாட்சி அதிகாரம் பெற்ற வங்கி வாரிய அமைப்புஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கித் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் அலுவலகம் சாராத இயக்குனர்களை நியமிப்பதிலும் இந்த அமைப்பு ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி