சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்: தமிழகத்தில் 46,000 பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2015

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்: தமிழகத்தில் 46,000 பேர் பங்கேற்பு


சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்குகின்றன.மார்ச் 2-இல் தொடங்கும் பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும்,10-ஆம் வகுப்புத் தேர்வு 26-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.
10-ஆம் வகுப்பில் பள்ளி அளவிலான தேர்வு மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது.பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் இருந்து 16 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுத உள்ளதாக சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் சுதர்சன ராவ் தெரிவித்தார்.சென்னை மண்டலத்தில் பிளஸ் 2 தேர்வை 70 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 1.7 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: 10-ஆம் வகுப்புத் தேர்வை நிகழாண்டு நாடு முழுவதிலும் 3,537 தேர்வு மையங்களிலிருந்து 13,73,853 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை 3,164 தேர்வு மையங்களிலிருந்து 10,40,368 பேர் எழுதுகின்றனர்.நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 3.37 சதவீதம் அதிகரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 1.01 சதவீதம் அதிகரித்துள்ளது.தேர்வுகளைக் கண்காணிக்க சிறப்புப் பார்வையாளர்கள், பறக்கும் படைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.வினாத்தாள் கட்டுகள் 4 உதவி கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் பிரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பில் பார்வையற்றோர் 391 பேரும், கற்றலில் குறைபாடுடையவர்கள் 988 பேரும், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் 225பேரும், உடல் ஊனமுற்றோர் 904 பேரும், மன வளர்ச்சி, அறிவுத் திறன் குறைபாடுடையவர்கள் 147 பேரும் எழுதுகின்றனர்.பிளஸ் 2 தேர்வில் பார்வைற்ற 363 பேர் உள்பட மொத்தம் 2,066 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்காக கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி