'விசா' மற்றும் 'மாஸ்டர் கார்டு' அட்டைகள் போல, 'ரூபே' பண அட்டையை பயன்படுத்தி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள், ராணுவம், உளவு, பாதுகாப்பு துறை தகவல்கள்தவிர்த்து, பிற தகவல்களை பொதுமக்கள் கேட்டு அறியும் பொருட்டு, 2005ம் ஆண்டு முதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. தகவல்களை பெற விரும்புபவர்கள், அதற்கான மனுவுடன், நேரடியாகவோ, தபால்மூலமோ, தகவல் கமிஷனுக்கு விண்ணப்பித்து, 10 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை வங்கிகள் மூலமாகவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமும் செலுத்தலாம். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, ரொக்கமில்லாத பணப்பட்டுவாடா அட்டையாக விளங்கும், ரூபே அட்டைகள் மூலம் இணையதளம் வழியாகவும்,தகவல்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியும். இணையதளம் வழியாக, தகவல் பெற விரும்புபவர்கள், www.rtionline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அதற்கான தொகையை, ரூபே அட்டைகள் மூலம் செலுத்தலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி