பரோடா வங்கியில் அதிகாரி பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2015

பரோடா வங்கியில் அதிகாரி பணி.


பரோடா வங்கியில் காலியாக உள்ள 1200 Probationary Officers in Junior Management Grade, Scale-I பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு Indian Nationals forBaroda Manipal School of Banking (BMSB)நடத்தும் டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 1200

பணி: Probationary Officers in Junior Management Grade, Scale-I

சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700

பயிற்சி வகுப்பு: Diploma in Banking and Finance

பயிற்சி காலம்: 1 வருடம்

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டுமாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 17.03.2015 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற வழியில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.03.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2015

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.com/Careers/Admission_28_2_2015.asp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி