தமிழக அரசின் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால், திட்டமிட்டபடி ஏப்ரல்15 (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, இன்று சென்னையில் சத்துணவு ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
அமைச்சர்கள் வளர்மதி, வீரமணி, பழனியப்பன் தலைமையில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 10 சங்கங்கள் பங்கேற்றன.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். ''இந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்துள்ளது'' என சண்முகராஜன் கூறினார்.ஆனால், இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.
தமிழக அரசின் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால், திட்டமிட்டவாறு, ஏப்ரல் 15 (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி