"தமிழகத்தில் அனுமதியின்றி 5 ஆயிரம் நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன" என தமிழ்நாடு செவிலியர் பள்ளிகள் சங்க மாநிலத் தலைவர் பாலாஜி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 25 அரசு நர்சிங் பள்ளிகள் உட்பட, 200 மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. இவற்றில் 3 ஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் போலி நர்சிங் பள்ளிகள் இயங்குகின்றன. இவை, கேரளாவில் தடைசெய்யப்பட்ட அறக்கட்டளை மூலம் செயல்படுகின்றன. இங்கு 10 ம்வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் கூட சேர்த்து கொள்ளப்படுகின்றனர். 10க்கு 10 அடி அறையில் பள்ளியை நடத்துகின்றனர்.இதில் பயின்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம், நர்சிங் கவுன்சிலில் பதிய முடியாது.
இதனால் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அரசு உத்தரவு இருந்தும் போலிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 7 ஆயிரம் நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பள்ளிகளில் படித்தோருக்கு மாவட்டந்தோறும் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம்.அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் விபரங்களை www.tamilnadunursingcouncil.com ல் தெரிந்து கொள்ளலாம், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி