தனியார் பாலிடெக்னிக்குகளுக்கு ஒரு பருவத்துக்கு ரூ. 15 ஆயிரம்: கட்டண நிர்ணயக் குழு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2015

தனியார் பாலிடெக்னிக்குகளுக்கு ஒரு பருவத்துக்கு ரூ. 15 ஆயிரம்: கட்டண நிர்ணயக் குழு அறிவிப்பு


சுயநிதி தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) ஆண்டுக் கட்டணத்தை நிர்ணயித்து, அதற்கான குழு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கல்விக் கட்டணம் நிகழ் கல்வியாண்டு (2015-16), அடுத்த கல்வியாண்டுகளுக்கு (2016-17) பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்திலுள்ள சுயநிதி தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகள், ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்துள்ளது. இந்தக் குழுவானது பல்வேறு காலகட்டங்களில் கூடி, கல்லூரிகள்அளித்த விவரங்கள், ஆய்வுக் குழு சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை, கல்லூரி நிர்வாகத்தின் கருத்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.கட்டணம் எவ்வளவு? பலதொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒரு மாணவருக்கு, ஒரு பருவத்துக்கு (செமஸ்டர்) குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகை என்பது கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், சிறப்புக் கட்டணம், ஆய்வுக்கூடம், கணினி, இணையதள சேவை, விளையாட்டு, பணியிட வாய்ப்பு-பயிற்சி, பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்தல்ஆகியவற்றுக்கான கட்டணங்களை உள்ளடக்கியது. ஹோட்டல் மேலாண்மை- கேட்டரிங் தொழில்நுட்பப் படிப்புக்கு ஒரு பருவத்துக்கான (செமஸ்டர்) கட்டணமாக ரூ. 25ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி