தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் புதிதாக 30 பி.எட். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.பி.ஏ., பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் உடனே பி.எட் ஆசிரியர்கள் பயிற்சியை தேர்வு செய்வார்கள்.
இந்த பயிற்சியை முடிந்தால்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்ற முடியும்.மேலும், தற்போது தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால்தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி என்ற நிலை உள்ளது. அதனால் பி.எட் படிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பெண்கள் ஆசிரியர் பயிற்சியை அதிகளவு விரும்பி வருகின்றனர்.தமிழகத்தில் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் 668 உள்ளன.இந்த கல்வியாண்டில் மேலும் 30 பி.எட் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
This comment has been removed by the author.
ReplyDelete