உலகம் முழுவதும் அரசாங்கங்கள் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த விடுமுறையில் பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது.
அந்நாட்டில் இனி குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது போல, தந்தைக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அந்நாட்டில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 50 வார விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுமுறையை கணவன், மனைவி இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம்.அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுமுறையை பிரித்துக்கொண்டு தங்கள் அன்பான குழந்தையை இருவரும் பராமரிக்கலாம். குழந்தையை தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுமுறையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் வெற்றிகரமாக வேலையை தொடர்வதா அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவது அரசின் இம்முடிவால் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், தாயின் வேலை பறிபோவதை தடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக குழந்தையை பெற்றெடுத்த காரணத்திற்காக தாயை வேலை விட்டு நீக்குவதுசட்டவிரோதம் என பிரிட்டன் சட்டம் இயற்றியிருந்தது. எனினும் பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்று தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, எப்போதும் குழந்தைகளை வீட்டில் தாய் மட்டுமே கவனித்துக்கொண்டு வரும் நிலையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள விருப்பப்படுகின்றனர். ஆகையால் அரசு எடுத்துள்ள இம்முடிவுஇருவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்று அந்நாட்டு துணை பிரதமர் நிக் க்ளெக்கூறினார். அரசின் இம்முடிவால் ஆண்டுதோறும் 2,85,000 தம்பதியர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி