மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் இறப்புக்கு பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து, இது தொடர்பான தகவலை ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதுவரை ஆதார் எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளாத ஓய்வூதியதாரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படியும் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இடையூறு இல்லாமல் பணம் சென்றடைவதை உறுதிபடுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘ஜீவன் பிரமான்’ டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்குள் இந்த நடைமுறைகளை பூர்த்தி செய்வது கட்டாயம் ஆக்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி