பிளஸ் 2 சிறப்பு வகுப்பு; ஆர்வமற்ற மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2015

பிளஸ் 2 சிறப்பு வகுப்பு; ஆர்வமற்ற மாணவர்கள்


பிளஸ் 2 சிறப்பு வகுப்புக்கு, கல்வித்துறை சார்பில் எந்த கட்டுப்பாடும்விதிக்கப்படாததால், சில மாணவர்கள் புறக்கணிக்கின்றனர். இது, ஆசிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, கோடை விடுமுறையில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. மாணவர் வருகை தொடர்பாக, கல்வித்துறை சார்பில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

இதனால், அனைத்து மாணவர்களையும் சிறப்பு வகுப்புக்கு வரவழைப்பதில், ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:சிறப்பு வகுப்பு தொடர்பாக, கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. மாணவர்களை கட்டாயப்படுத்தி, சிறப்பு வகுப்புக்கு வரவழைக்க இயலாது. அனைத்து மாணவர்களும், சிறப்பு வகுப்புகளால் பயன்பெற வேண்டும். எனினும், சில மாணவர்கள் பல்வேறு காரணங்களை கூறி, வகுப்புகளை புறக்கணிக்கின்றனர். இதுதொடர்பாக, பெற்றோர் இடையே விழிப்புணர்வு அவசியம். இத்தகைய பிரச்னைகளுக்கு இடம் அளிக்காத வகையில், வழக்கமாக பள்ளிக்கு அனுப்புவதை போலவே, தங்கள் குழந்தைகளை ஊக்குவித்து, பெற்றோர் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி