படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2015

படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது

'இந்தியாவில், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை, 90 சதவீதம் குறைந்துள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி என்பதில், இந்திய அரசு குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது' என, 'யுனஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.


'அனைவருக்கும் கல்வி, 2000 - 2015' என்ற பெயரில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான - யுனஸ்கோ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை, 90 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. அதேநேரத்தில், அனைவருக்கும் ஆரம்ப கல்வி என்பதில், குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும், மாணவர்கள் மற்றும் மாணவியர் எண்ணிக்கை, இந்தியாவில் சமமாக உள்ளது. இந்த விஷயத்தில், தெற்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில், இந்தியாவே முன்னணியில் உள்ளது.அனைத்து குழந்தைகளையும், மழலையர் பள்ளியில் சேர்ப்பது என்ற விஷயத்தில், உலக அளவில், 47 சதவீத நாடுகள் சாதனை படைத்துள்ளன. அதேநேரத்தில், இந்தியா உட்பட, 8 சதவீத நாடுகள், கிட்டத்தட்ட சாதனை அளவை எட்டி உள்ளன.
இருப்பினும், உயர் கல்வி கற்பதில், இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. இந்த விஷயத்தில், இந்தியா உட்பட, 32 நாடுகள் சாதனை படைக்க வேண்டும் எனில், நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.அனைத்து குழந்தைகளும், ஆரம்ப கல்விக்கு முந்தைய கல்வி, ஆரம்ப கல்வி மற்றம் இடைநிலைக் கல்வி கற்பதை, வரும், 2030ம் ஆண்டுக்குள், அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.இந்தியாவில் அரசியல் ரீதியாகவும், மற்ற வகையிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி என்பதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, யுனஸ்கோ அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி