சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு வழங்க இடைக்காலத் தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2015

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு வழங்க இடைக்காலத் தடை.

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி தரப்பு வாதம் நிறைவு பெற்றது.

முதலில் அன்பழகன் சார்பிலும், பிறகு ஜெயலலிதா சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.பிறகு, வழக்கின் தீப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையே, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 15ம் தேதி வரை வழங்கக் கூடாது என்று இடைக்கால தடை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. இந்த உலகத்திலே எங்க வயித்தெரிச்சலுக்கு மீறின சக்தி வேற எதுவும் கிடையாது.

    ReplyDelete
  2. No difference between British- Indian politician and Indian politician...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி