சமூக அறிவியலில் கேள்விகள் எளிமை: பத்தாம் வகுப்பு மாணவர்கள்மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2015

சமூக அறிவியலில் கேள்விகள் எளிமை: பத்தாம் வகுப்பு மாணவர்கள்மகிழ்ச்சி


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் வினாக்கள் மிக எளிதாக இருந்தன,' எனமாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட மாணவர்கள் கருத்து:

ஏ.அழகு முனீஸ்வரன்(அரசு உயர்நிலை பள்ளி, விருதுநகர் வடமலைக்குறிச்சி):
அனைத்து கேள்விகளும் எளிதாகவே இருந்தன. ஏற்கனவே பள்ளி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களே இடம் பெற்றிருந்ததால் எளிதில் விடையளிக்கமுடிந்தது. மேலும் காலக்கோடு, மேப் கேள்விகளை நன்றாக பார்த்திருந்ததால் சரியாக எழுதி உள்ளேன்.கே.மாரீஸ்வரன் (எஸ்.எச்.என்.எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்):கடந்த காலங்களில் நடந்த பொதுத்தேர்வின் போது கேட்கப்பட்ட அதே முக்கியமான கேள்விகள்தான் இந்த தேர்விலும் கேட்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் கூறிய முக்கியமான கேள்விகள் வந்ததால் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினேன். 'மேப்' கேள்விகள் நன்றாக படிக்காத மாணவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்கும். 5 மதிப்பெண் கேள்வியில் ஒரு கேள்வி மட்டும் 'புளுபிரின்டில்' இருந்து இடம்பெறவில்லை.

எஸ். மதுமிதா( எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலை பள்ளி, அருப்புக்கோட்டை):
கேள்விகள் எளிமையாக இருந்தன. நூறு சதவீதம் மதிப்பெண் வர வாய்ப்பு உள்ளது. புக் பேங்கில் உள்ள கேள்விகளையே கேட்டுள்ளனர். பாடத்தில் 1857புரட்சி என்ற பகுதி கடந்த ஆண்டு கேட்கவில்லை. இந்த ஆண்டு நிச்சயமாக வரும் என நினைத்து படித்தோம். 5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டது. அதேபோல் ரூஸ்வெல்ட் பற்றிய கேள்வியும் வந்திருந்தது.

ஆர்.முத்துபாண்டி (ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, ஆமத்தூர்):
மாணவர்கள் எதிர்பார்த்ததை விட மிக எளிதாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒன்று, இரண்டு மதிப்பெண், விரிவான விடையளித்தல் வினாக்கள் மிக எளிதாக இருந்தன. காலக்கோடு, மேப் எதிர்பார்த்த படி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. தலைப்பின் கீழ் விடையளித்தலில் 46 வது கேள்வியில் டாக்டர் பி.அம்பேத்கர் பற்றி அ, ஆ, கேள்விகள் புத்தக வினாக்களில் இல்லாத கேள்விகளாகும். இதன் விடைகள் பாடத்தினுள் இருக்கிறது. இதை அறிந்து மாணவர்கள் எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் அந்த கேள்வியை எழுதாமல் சாய்சில் விடுத்து வேறு கேள்விகள் எழுதினாலும் நூறு மதிப்பெண் எளிதில் கிடைக்கும். பாடத்தின் உள் பகுதியிலிருந்து இது போன்ற கேள்வி கேட்கப்படுவது சமூக அறிவியல் பாடத்தில் முதல் முறை. இந்த கேள்வியால் மெல்ல கற்கும் திறனுடைய மாணவர்கள் இரண்டு மதிப்பெண்ணை இழக்கும் நிலை ஏற்படும். ஓரளவிற்கு படிக்கும் மாணவர்கள் கூட, நூறு மார்க்கை எளிதில் பெறும் வகையில் வினாக்கள் அமைந்துள்ளன, என்றார்.

2 comments:

  1. Pls give answer key for 10 science prism

    question 2.42 refractive index..

    Anybody please ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி