மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2015

மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறையின் மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மூத்த விரிவுரையாளர் மூலம் சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது. மூத்த விரிவுரையாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, 2011ல் டி.ஆர்.பி., மேற்கொண்டது. ஆனால், இதில் பல குளறுபடிகள் இருந்ததாக, டி.ஆர்.பி.,க்கு எதிராக பலர் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கிடையில், இரண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பின், தற்காலிகத் தேர்வு பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் முடிவுகளைப் பொறுத்தது என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி