இந்தியாவில் ஜியோனி புதிய போன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2015

இந்தியாவில் ஜியோனி புதிய போன்


ஜியோனி நிறுவனம் ஸ்லிம் போன்களுக்குப் பெயர்பெற்றது. இந்நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான எலைஃப் எஸ்7 மாதிரியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜியோனியின் எலைஃப் எஸ்5.5 மற்றும் எலைஃப் எஸ்5.1, ஆகிய மாதிரிகளின் தொடர்ச்சியான இந்த மாதிரி பார்சிலோனா மொபைல் கண்காட்சியில் அறிமுகமானது.

இப்போது இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.இரட்டை சிம் வசதி கொண்ட இந்த போன் 5.5 மி.மி. தடிமன் கொண்டது. 5.5 அங்குல டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 இயங்குதளத்துடன் வந்துள்ளது. 13 மெபி பின்பக்க காமிரா மற்றும் 8 மெபி முன் பக்க காமிராக்களைக் கொண்டிருக்கிறது.

2ஜி,3ஜி, 4ஜி என எல்லா வசதிகளும் இருக்கின்றன. இதன் விலை ரூ.24,999.நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்ய இருக்கும் எலைஃப் இ8 ஜூன் மாத வாக்கில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எலைஃபி இ7 அறிமுகம் செய்யப்பட்ட 18 மாதங்களுக்குப் பிறகு இது அறிமுகமாக உள்ளது. இது வெறும் மேம்படுத்தப்பட்ட மாதிரியாக இல்லாமல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என ஜியோனி தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜியோனி இந்தியாவிலேயே தனது போன்களை உற்பத்திசெய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் குழுவையும் விரிவாக்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி