வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2015

வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு


பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றிய பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் புதியவடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.12.38 நிறுவனத்தின் தளத்தில் கிடைக்கின்றது.
அப்டேட் செய்யப்பட்ட பின் புதிய ஐகான்கள், அனிமேஷன் மற்றும் பல நிறங்களில் எமோஜி ட்ரே மற்றும் வாய்ஸ்கால் அம்சம் இருக்கின்றது. அப்டேட் செய்யப்பட்ட பின் ஆப் டாஸ்க் பாரில் கால், சாட் மற்றும் கான்டாக்ட் பார் இருக்கின்றது.

சாட் ஓபன் செய்யும் போது வாய்ஸ் ரெக்கார்டு செய்ய வட்ட வடிவில் பச்சை நிற ஐகான் பின்னணியில் இருக்கின்றது. இதோடு புது அனிமேஷன்கள் வழங்கப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.போனில் ஸ்கிரீன் ரோடேஷன் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது ப்ளிப் செய்தால் பெரிய வாட்ஸ்ஆப் ப்ரோஃபைல் படம் தெரியும். இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனம்apk ஃபைலினை பதிவிறக்கம் செய்ய வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வாட்ஸ்ஆப் தெரிவிக்கும் போது விண்டோஸ் போன்களில் வாய்ஸ் கால் அம்சம் விண்டோஸ் போன்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐஓஎஸ் கருவிகளுக்கு விரைவில் இந்த அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி