இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2015

இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை

இளநிலை பயிற்சி அலுவலருக்கான பணிக்காலியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணை இயக்குநரால்(கைவினைஞர் பயிற்சி) இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு தகுதியுடைய பதிவுதாரர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு மற்றும் அரசு அங்கிகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு பட்டயம் பெற்று பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும். இதில், மெக்கானிக்கல் என்ஜினியரிங், கணிப்பொறி தொழில்நுட்பம், கேட்டரிங் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், மெரைன் என்ஜினியரிங், டூல் அண்ட் மை மேக் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினியரிங், பேஷன் டெக்னாலாஜி, எம்ராயட்ரி நீடில் ஆர்ட் ஆகிய பிரிவுகளில் பட்டயம் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.1.2015 அன்றைய நாளில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், அருந்ததியினர் ஆகியோருக்கு 40 வயதிற்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 37 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு உண்டு.

இப்பணிக்கான மாநில அளவிலான பதிவு மூப்பு, கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரம் சூலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 8-ம் தேதி காலை 11 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வி சான்றுகளுடன் நேரில் வந்து தங்கள் பெயர் பரி்ந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். எனவே மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருவோரின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி