ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
தமிழக அரசு 28-5-2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டது.
2013 நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெற்றன.
பின்னர், 2014 ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 3-4-2009 தேதிக்கு முன்னர் எம்.ஃபில். முடித்த விண்ணப்பதாரர்களின் பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த விவரங்களின் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் தகுதிப் பட்டியலிலிருந்து ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
இப்போது நேர்முகத் தேர்வு முடிந்து, இறுதியாக பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வரலாறு, புவியியல், சுற்றுலா, அரசியல் அறிவியல், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷுவல் கம்யூனிகேஷன், இந்திய கலாசாரம், வணிகவியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), வணிகவியல் (சர்வதேச வணிகம்) உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இதில் இடம்பெற்றுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் தனியாக வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
congratulations to the selected professors.
ReplyDeleteமுதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!
ReplyDeletePG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 30 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 7598299935
when will trb announce the polytechnic trb exam...
ReplyDeletewhat about engineering TRB?
Deletedoes anyone knows abt TRB polytechnic EXaam
Delete