ஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

ஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம்


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு, ஜூன் 1ம் தேதி, இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு, 14 இலவசத் திட்டங்களை அமல்படுத்துகிறது.
இலவச 'ஜியோமெட்ரிக் பாக்ஸ்', 'க்ரயான்ஸ்' பென்சில்கள், சீருடை, காலணிகள், பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, கடந்த ஏப்ரலில் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்களை, ஜூன் 1ம் தேதி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, நேற்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும், பாட புத்தக மண்டல அலுவலகங்கள் மற்றும் பாடப்புத்தக இருப்பு மையங்களில் இருந்து, பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டன. வரும் 25ம் தேதிக்குள், பள்ளிகளில்புத்தகங்களை வாங்கி வைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி