10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால்: சிஇஓ அலுவலகம் முற்றுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2015

10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால்: சிஇஓ அலுவலகம் முற்றுகை

பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது என்று வாட்ஸ் அப்பில் வெளியான தகவலால் வேலூர் சிஇஓ அலுவலகத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், ‘வாட்ஸ் அப்’ மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வேகமாக பரவியது.அதில் ‘மாவட்டத்தில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசின் அப்துல்கலாம் மற்றும் மோடி கல்வி உதவித்தொகை திட்டத்தின்மூலம் தலா ₹10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவற்றை முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து விரைவில் பணம் பெற்றுச்செல்லலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தகவல் பரவியதும், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிஇஓ அலுவலகத்துக்கு மாணவர்களும், பெற்றோரும் படையெடுத்தனர்.திடீரென மாணவர்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அப்படி எந்த உதவித்தொகையும் வழங்கவில்லை, வாட்ஸ் அப் தகவல் பொய்யானது என்று கூறி மாணவர்களை திருப்பி அனுப்பினர்.
இந்தநிலையில் நேற்றும் 50க்கும் மேற்பட்டவர்கள் வந்து கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொடுங்கள் என்றுஅதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். பின்னர், ‘அப்படி திட்டம் எதுவும் அரசு அறிவிக்கவில்லை. யாரோ வதந்தி கிளப்பி விட்டுள்ளனர்’ எனக்கூறி திருப்பி அனுப்பினர். இதனால் அனைவரும் ஏமாற்றத்துடன்திரும்பிச்சென்றனர்.இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறும் போது, ‘யாரோ விஷமிகள் இதுபோன்ற தவறான தகவலை பரப்பி உள்ளனர்.
இதுபற்றி போலீசில் புகார் செய்ய உள்ளோம்’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி