நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்':'104'ல் ஆலோசனை துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2015

நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்':'104'ல் ஆலோசனை துவக்கம்

தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 29ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டை இணைய தளத்தில் குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின், தேசிய தகவலியல் மையங்கள், மைய மற்றும் கிளை நூலகங்கள் மற்றும் படித்த பள்ளிகளில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே 29ம்தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய பள்ளியிலும் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, ஜூன் 4ம் தேதி முதல், தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை:

மாணவர்கள், பெற்றோருக்கான, '104' மருத்துவ ஆலோசனை மையத்தில், தொலைபேசி வழி, மனநல ஆலோசனை துவக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:மதிப்பெண் குறைவு;தோல்வி என, மன உளைச்சலுக்கு ஆளாகுவோர், பக்குவமின்றி சிலர் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்; இதற்கு, பெற்றோரும் காரணம். போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான வழிகாட்டல் இல்லாததுமே, இதற்கு காரணம். இது போன்றோர், '104'யை தொடர்பு கொண்டால், நல்ல மனநிலை பெற முடியும். இரு நாட்களாக, பிரத்யேக குழு ஆலோசனை வழங்கி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி