பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், காலணி, சீருடை என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும்,
மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் பள்ளி கல்வித் துறை பரிந்துரைப்படி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் மூலம் தருவிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தேவையான புத்தகங்கள், மாவட்டந்தோறும் உள்ள பாட நுால் கழகத்தின் மூலம், பள்ளிகளுக்கு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இதில், 10ம் வகுப்பு பாட புத்தகத்தின் விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அது போல, மேல்நிலைவகுப்புக்கான பாட புத்தகங்களின் விலை, கடந்த ஆண்டை விட, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 - 15ம் ஆண்டில், 10ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் புத்தகம் தலா, 85 ரூபாய்க்கு விற்கப்பட்டன.நடப்பாண்டில், தமிழ் புத்தகம் - 110 ரூபாய்; ஆங்கிலம் - 90 ரூபாய்; கணிதம் - 160 ரூபாய்; அறிவியல் - 170 ரூபாய், சமூக அறிவியல் - 130 ரூபாயாகவும், ஒரு செட், 660 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன; இது, கடந்த ஆண்டை விட, 235 ரூபாய் கூடுதல்.அதே போல, மேல்நிலை வகுப்புகளுக்கான தமிழ் புத்தகம், 25 ரூபாயிலிருந்து, 40 ரூபாயாகவும்; ஆங்கில புத்தகம், 28 ரூபாயிலிருந்து, 60 ரூபாயாகவும்; மற்ற புத்தகங்கள் அனைத்தும், 60 முதல், 80 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் கழகம் மூலம் தேவைக்கு ஏற்ப கிடைக்கின்றன.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாறும் போது, புத்தகத்தின் விலை உயரும். கடந்த ஆண்டு பாடத்திட்டம் மாறாததால், புத்தகத்தின் விலை உயரவில்லை.நடப்பாண்டு, ஜனவரி மாதம் புத்தகத்தின் விலையை உயர்த்தி, அரசாணை வெளியிட்டு, தனியார் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது, தேவைக்கு ஏற்ப புத்தகம் வினியோகம் செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி