10–ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2015

10–ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் 104 மருத்துவ சேவை வழியாக முற்றிலும் இலவச ‘கவுன்சிலிங்’ அளிக்கப்படுகிறது.
இந்த உளவியல் ஆலோசனை மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் வழங்கப்படுகிறது. தேர்வு முடிவுகளை அச்சமின்றி எதிர்கொள்வது, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலும், தோல்வி அடைந்தாலும் கவலைபடத் தேவையில்லை.மாணவர்கள் சோர்வு ஏற்படாமல் மீண்டும் எப்படி வெற்றி பெறுவது, தவறான முடிவுகள்எடுப்பதை தவிர்ப்பது போன்ற ஆலோசனைகளையும், வழிகாட்டு தலையும் உளவியல் மருத்துவ குழு அளிக்கிறது.104 சேவை எண்ணில் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து தொடர்பு கொண்டாலும்அவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்கப்படும். நேற்று முன்தினம் முதல் இந்தசேவை தொடங்கப்பட்டுள்ளது.

உளவியல் ஆலோசனை குறித்து 104 சேவை ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறியதாவது:–மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பதட்டம் இல்லாமல் எதிர்கொள்ள இந்த உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.இந்த சூழலில் 50 உளவியல் ஆலோசனை மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர். 24 மணி நேரமும் இந்த சேவை அளிக்கப்படும். மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இது உதவியாக இருக்கும்.

இந்த வாய்ப்பை பெற்றோர்கள், மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.கடந்த பிளஸ் 2 தேர்வின் போது 6000 அழைப்புகள் உளவியல் ஆலோசனைக்காக வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி