மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பயணப்படி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11-ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாக பார்வையற்ற ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ரவீந்திரன் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:தமிழகத்தில் பார்வையற்ற ஆசிரியர்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு போக்குவரத்து பயணப்படியாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. எனினும் விடுமுறை நாள்களுக்கு பயணப்படி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் பார்வையற்ற ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாவதால் தமிழக அரசு இதைக் கைவிட வேண்டும்.மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பார்வையற்ற ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பல்வேறு தேவைகளுக்கு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை மருத்துவ சான்றிதழுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11-ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் எழும்பூரில் பேரணி நடைபெறும்.
இந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பார்வையற்ற ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார், பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி