மொபைல் எண் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் அமல்படு்த்த மேலும் 2 மாதம் அவகாசம் நீட்டிப்பு: டிராய் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2015

மொபைல் எண் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் அமல்படு்த்த மேலும் 2 மாதம் அவகாசம் நீட்டிப்பு: டிராய் அறிவிப்பு


நாடு முழுவதுமான எம்என்பி வசதியை அமல்படுத்த தொலைத்தொடர்புநிறுவனங்களுக்கு மேலும் 2 மாதம் அவகாசம் நீடித்து டிராய் உத்தரவிட்டுள்ளது. மொபைல் எண்ணை மாற்றாமலேயே வாடிக்கையாளர் வேறு நிறுவன சேவைக்கு மாறிக்கொள்ளும் என்என்பி வசதி அந்தந்த மாநிலங்களுக்குள் மற்றும் செயல்பாட்டில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லும்போதுஅங்கு புதிதாக மொபைல் எண் வாங்க வேண்டும். இதை தவிர்க்கவும், வேறு மாநிலங்களுக்கு சென்றாலும் அதே எண்ணை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தவும் வசதியாக நாடு முழுவதுக்குமான என்என்பி வசதியை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டிருந்தது. இதற்கு மே 3ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதன்படி மே 3ம் தேதி (இன்று) முதல் நாடுமுழுவதுமான எம்என்பி வசதி நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். இதுகுறித்து டிராய் வெளியிட்ட அறிக்கையி்ல், ‘‘ நாடு முழுவதுக்குமான எம்என்பி வசதியை செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதுக்கும் எம்என்பி வசதியை ஏற்படுத்த தங்கள் நெட்வொர்க்குகளில் தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு மேலும் 8 வார அவகாசம் தேவை. அப்போதுதான் இந்த சேவையை முழுவதுமாக வழங்க முடியும். எனவே, அவகாசத்தை இதற்கேற்ப நீட்டிக்க வேண்டும் என்று இந்திய மொபைல் நிறுவனங்கள் சங்கம் டிராய்க்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எம்என்பி செயல்படுத்த வசதியாக தங்களது ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேரில் உரிய மாற்றங்களை செய்துள்ளன.

அவை தங்கள் வட்டத்துக்குள் இந்த வசதியை பரிசோதனை செய்து பார்த்து வருகின்றன. இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனை நிலைகளையும் கடந்து இரண்டு மாதங்களில் பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகும் என்று டிராய்அறிக்கையில் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி