சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: 82 விழுக்காடு மாணவ-மாணவிகள் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2015

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: 82 விழுக்காடு மாணவ-மாணவிகள் தேர்வு


சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய கல்வித்துறையின் 12-ம்வகுப்பு தேர்வுகளில் சென்னை மண்டலத்தில் 91.14 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வழக்கம் போல் மாணவிகளே அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்திய அளவில் மொத்தம் 82 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்வாகி உள்ளனர். மண்டல அளவில் திருவனந்தபுரம்மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இங்கு அதிக அளவில் மாணவ மாணவிகள் தேர்வாகி உள்ளனர். மாணவிகள் 87.56 விழுக்காடு தேர்வாகி உள்ளனர். இதே போல் மாணவர்கள்77.77 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னை மண்டலத்தில் 91.14 மாணாக்கர்கள் தேர்வாகி உள்ளனர். இதில் மாணவிக்ள்92.13 விழுக்காடும் மாணவர்கள் 90.37 விழுக்காடும் தேர்ச்சி பெற்ற‌ள்ளனர். சென்னை மண்டல்த்தில் மாற்றுதிறனாளிகள் பிரிவில் தேர்வு எழுதிய மாணவி விதி மகேஷ்வரி 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த தேர்வு முடிவைக்காண அதிகமானோர் ஒரே நேரத்தில் இணையதளத்தை பயன்படுத்தியதால் குறிப்பிட்ட வலைதளம் சற்று நேரம் முடங்கியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி