ஒரே நேரத்தில் 14 புத்தகங்கள் வெளியிட்டு சிவகாசி பள்ளி ஆசிரியை சாதனை ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

ஒரே நேரத்தில் 14 புத்தகங்கள் வெளியிட்டு சிவகாசி பள்ளி ஆசிரியை சாதனை !


சிவகாசி காரனேசன் துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரியும் இடைநிலை ஆசிரியை, கவிஞர் மாலாபிரியதர்ஷினி ஒரே நேரத்தில் 14புத்தகங்கள் வெளியிட்டு எழுத்தாளர்கள் மத்தியில் சிறந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
இதுவரை தமிழ் மொழியில் ஒரே நேரத்தில் திரைப்படக் கவிஞர் பா.விஜய் 12 புத்தகங்கள் எழுதியதே சாதனையாக இருந்த்தது. அச்சாதனையை முறியடித்துள்ளார் கவிஞர் மாலாபிரியதர்ஷினி அவர்கள். ஆசிரியைப் பணியைச் செய்து கொண்டே சப்தமில்லாமல் இச்சாதனையைச் செய்துள்ளார். அச்சாதனை ஆசிரியருக்கு தமிழக ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். அப்புத்தகங்களின் மதிப்புரை மற்றும் பாடு பொருள் ஆய்வரங்கம் சிவகாசி பெல் ஹோட்டலில் 03.05.20155 அன்று இலக்கியப் போரொளி கலைமாமணி இளசை சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கவிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள், எழுத்தாளார்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டுசிறப்பித்தனர். அவரை வாழ்த்த விரும்புவோர் அவரின் எழுத்துக்களை வாசிக்க விரும்புவோர் 9790429068 என்ற எண்ணினைத் தொடர்பு கொள்ளவும்.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி