உதவித்தொகையுடன் ஜப்பானில் உயர் கல்வி:விண்ணப்பிக்க ஜூன் 17 கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

உதவித்தொகையுடன் ஜப்பானில் உயர் கல்வி:விண்ணப்பிக்க ஜூன் 17 கடைசி நாள்


ஜப்பானிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பை ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜப்பானில் உள்ள கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் (மெக்ஸ்ட்) சர்வதேச மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.இதன்படி, சிறப்புப் பயிற்சி கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழகம்உள்ளிட்ட ஜப்பானிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.சிறப்பு பயிற்சி கல்லூரி (3-ஆண்டுகள்): முதல் ஆண்டில் ஜப்பான் மொழி பயிலவும், மீதமுள்ள 2 ஆண்டுகளில் தொழில்நுட்பம், உணவூட்டவியல், கல்வி-நலத் துறை, வர்த்தகம், ஆடை வடிவமைத்தல், குடும்பப் பொருளாதாரம், கலாசாரம் -பொதுக்கல்வி உள்ளிட்ட துறைகளில் கல்வி அளிக்க உள்ளது.தொழில்நுட்ப கல்லூரிகள் (4 ஆண்டுகள்): முதலாம் ஆண்டில் ஜப்பானிய மொழியும், மீதமுள்ள 3 ஆண்டுகளில் செயல்முறை விளக்கத்துடன் கூடிய தொழில் சார்ந்த பொறியியல் கல்வி வழங்கப்படும். மெக்கானிக்கல், மின்-மின்னணு பொறியியல், தகவல் தொலைத்தொடர்பு- "நெட்வர்க் இன்ஜினியரிங்', மூலப் பொருள் பொறியியல், கட்டடக்கலை- கட்டுமான பொறியியல், கடல் சார்ந்த பொறியியல் உள்ளிட்ட துறைகளில் கல்வி அளிக்கப்படும்

.பல்கலைக்கழகம் (இளநிலை): 5 ஆண்டுகளில் முதலாம் ஆண்டு ஜப்பானிய மொழியும், சமூக அறிவியல்- மானுடவியல் துறையில், சட்டம், அரசியல், ஆசிரியரியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வியாபார நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் கல்வி அளிக்கப்படும்.இயற்கை அறிவியல் துறையில், அறிவியல் (கணிதம், இயற்பியல், வேதியியல்), மின்-மின்னணு, மெக்கானிக்கல், கட்டுமான பொறியியல் - கட்டடக்கலை, வேதியியல், வேளாண்மை, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விஅளிக்கப்படும்.

தகுதி: விண்ணப்பதாரர்கள் 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-க்கு பிறகும், 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முன்பும் பிறந்திருத்தல் வேண்டும். மேலும்,பிளஸ் 2 உயர்நிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 3, 5 ஆண்டுக்கானபடிப்புகளுக்கு தகுதியுடையவர்களாவர். அதேபோல், 4 ஆண்டு படிப்புக்கு பிளஸ்1 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு: சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக வளாகத்தில் நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் நாள், நேரம் உள்ளிட்டவை பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்தத் தேர்வு எழுத ஜப்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் ஜப்பானிய கல்வி அமைச்சகம் மூலம் பிப்ரவரி 2016-க்குள் தெரிவிக்கப்படும்.விதிமுறைகளுடன் கூடிய விண்ணப்பப் படிவங்கள் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஜப்பானிய துணைத் தூதரக வளாகத்தில் வழங்கப்படுகின்றன. உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் ஜூன் 17-க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044-24323860- 63 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி