சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2015 - 16ம் கல்வி ஆண்டுக்கான, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கின.பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, நிர்வாக சிறப்பு அதிகாரி சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கி, முதல்விற்பனையை துவக்கி வைத்தார்.
சேர்க்கை விண்ணப்பங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகநிர்வாக அலுவலகம் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் அனைத்து படிப்பு மையங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பத்தின் விலை, 400 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதை, பதிவிறக்கம் செய்து, அத்துடன் விண்ணப்பத்திற்கான கட்டண, 'டிடி'யை இணைத்து, பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் ஜூன் 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி