பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை ஜூன் 28-ஆம் தேதியும், பொதுப் பிரிவு கலந்தாய்வை ஜூலை 1-ஆம் தேதியும் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
பிளஸ்-2 விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவு வெளியிடும் தேதி, மருத்துவக் கலந்தாய்வு தேதி இறுதியான பிறகு, பி.இ. கலந்தாய்வு தேதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 மையங்களிலும் காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. முதல் நாளில் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் விண்ணப்ப விநியோகத்தை ஆய்வு செய்ததோடு, சில மாணவர்களுக்கு விண்ணப்பங்களையும் வழங்கினர்.
பின்னர் அவர்கள் அளித்த பேட்டி: விண்ணப்ப விநியோகம் மே 27-ஆம் தேதி வரை நடைபெறும். பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
அதன் பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 15-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 19-ஆம் தேதியும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு தேதி: விளையாட்டுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஜூன் 29-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு கலந்தாய்வை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதியில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பிளஸ்-2 பொதுத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடும் தேதி, மருத்துவக் கலந்தாய்வு தேதி ஆகியவை இறுதி செய்யப்பட்ட பின்னர், இந்தத் தேதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றனர்.
கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். விண்ணப்பங்களை அண்ணா
பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி