குரூப் 2 பதவியில் 1,241 காலி பணியிடம்; விண்ணப்பிக்க மே 29 கடைசி நாள் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2015

குரூப் 2 பதவியில் 1,241 காலி பணியிடம்; விண்ணப்பிக்க மே 29 கடைசி நாள் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தலைவர்பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் குரூப் 2 பதவியில் அடங்கிய 8 உதவி வணிகவரி அதிகாரி சார்-பதிவாளர் கிரேடு2(காலி பணியிடம் 23), ஜூனியர் எம்ளாய்மென்ட் அதிகாரி(18),
லோக்கல் பண்ட் ஆடிட் டிபார்ட்மென்ட் உதவி ஆய்வாளர்( 78), இந்து சமய அறநிலையத்துறை ஆடிட்டிங் ஆய்வாளர் (28), கூட்டுறவுத்துறை சீனியர் இன்ஸ்பெக்டர்(333), வேளாண்மை துறை மார்க்கெட்டிங் ஜூனியர் கண்காணிப்பாளர்(72), வருவாய் உதவியாளர் (618) உள்ளிட்ட 18 வகையானபதவிகளில் அடங்கிய 1,241 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிரி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். தோ்வுக்கு தோ்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, நிரந்தர பதிவு செய்த விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து அப்பதவிகளுக்கு உரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவா்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிலிருந்து வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தோ்வு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணம், தோ்வு கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலம் செலுத்த ஜூன் 1ம் தேதி கடைசி நாள். ஆன்லைன் மூலமாகவும்செலுத்தலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்க 29ம் தேதி கடைசி நாள். முதல்நிலை எழுத்து தோ்வு ஜூலை 26ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.தோ்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு 150 மதிப் பெண்ணும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 150 மதிப்பெண்ணுக்கும் வினாக்கள் கேட்கப்படும். மாற்றப்பட்ட பாட திட்டத்தின்படி தோ்வுகள் நடத்தப்படும்.இதன் விவரம் டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in, www.tnpscexams.netல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

சந்தேகங்களுக்கு...

தேர்வு குறித்த சந்தேகங்களை 044- 2533 2855, 044-2533 2833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்தி ெகாள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

114 மையங்களில் தேர்வு

குரூப் 2 முதனிலை தோ்வுக்கு விண் ணப்ப கட்டணம் ரூ.50, தோ்வு கட்டணம் ரூ.75. இத்தோ்வு தமிழகம் முழுவதும் 114 மையங்களில் நடக்கிறது. தோ்வுமையங்கள் குறித்த வி்வரம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி