மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூவருக்கு பதவி உயர்வு,4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2015

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூவருக்கு பதவி உயர்வு,4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 3 பேருக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்த விவரம்:-
பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் இருந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குநராக (தொழிற்கல்வி) பதவி உயர்வு பெற்றுள்ளார்.சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார், மதுரையில் பிற்படுத்தப்பட்டோர், கள்ளர், சீர்மரபினர் துறை இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா, இணை இயக்குநராக (நாட்டு நலப்பணித் திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த உஷாராணி அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக இருந்த குப்புசாமி, அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநராக (பணியாளர் நலன்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக உள்ள சுகன்யாவிடம், நூலகத் துறை இணை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக இணை இயக்குநராக இருந்த அமுதவல்லி, அதே நிறுவனத்தில் பாடத்திட்ட இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி