பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதிய இத்தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றனர்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்றே கடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது.கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்தது: இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கியபாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், இந்த முக்கியப் பாடங்களில் பெரும்பாலானோரின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். மேலும் எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்பில் சேருவதற்கு தாங்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளதால், பெரும்பாலானோர் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வத்துடன் உள்ளனர்.இந்த நிலையில் பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் நாளான வெள்ளிக்கிழமையே விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப்பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுக்கூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும்.
வரும் 14-ஆம் தேதி வரைவிடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.கட்டண விவரம்: விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ. 550-ம், பிறபாடங்களுக்கு ரூ. 275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ. 305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி