2000 ரூபாய் வரை பின்கோடு தேவை இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2015

2000 ரூபாய் வரை பின்கோடு தேவை இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு


கிரெடிட், டெபிட் கார்டுகளின் மூலம் பொருட்கள் வாங்கும் போது பின் கோடு உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி சிறிய தொகை என்றாலும் கார்டு உபயோகப்படுத்தும் போது நமது பின் கோடினை உபயோகிக்க வேண்டி இருந்தது.
இப்போது 2,000 ரூபாய்க்கு குறைவான தொகைக்கு கார்டு உபயோகித்தால் பின் கோடு தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட எல்லைக்குள் உபயோகிக்கப்படும் Contact less கார்டுகளை சில வங்கிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன.

ஏனைய வங்கிகளும் அதனை அறிமுகப்படுத்தவுள்ளன.இந்த வகை கார்டுகளை பணம் செலுத்தும் இயந்திரத்தில் தேய்க்கத் தேவை இல்லை. வாடிக்கையாளரே கையில் வைத்தபடி அந்த இயந்திரத்தின் அருகில் கொண்டு சென்றாலே போதும் என்பது தான் அதன் சிறப்பம்சம்.அதே சமயத்தில் ஒரே நாளில் எத்தனை முறை அந்த மாதிரியான சிறிய அளவிலான பரிமாற்றங்கள் நடத்தப்படுகின்றன என்பதில் கவனமாக இருக்கவும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.இதற்குப் பதிலாக கார்டு உபயோகப்படுத்தும் போது மொபைலில் அதற்குரிய தகவலை உடனடியாக அனுப்புவது உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது.பின்கோடு உபயோகிக்காமல் கார்டினை உபயோகிப்பதற்கான புதிய லோகோ (“Contact less payment”) இருக்கும் இடங்களில் மேற்படிபின் கோடு உபயோகிக்காமல் 2,000 ரூபாய் வரை பயன்படுத்தலாம்.

2,000 ரூபாய்க்குகுறைவான தொகைக்கு கார்டு உபயோகிக்கும் போது குறிப்பிட்ட வாடிக்கையாளர் இப்போது நடைமுறையில் உள்ளது போல பின் கோடு உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் அவருக்கு அந்த வசதியினைத் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பின்குறிப்பு : ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது பின் கோடு தேவையே!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி