மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பு அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பு அறிமுகம்


மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பைஅறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆபிஸ் 2016 பதிப்பை தனி நபர் மற்றும்நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஐ.டி.துறையினருக்கு மட்டும் பரிசோதனை அடிப்படையில் ஆபிஸ் 2016 மென்பொருள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியிடப்பட்டிருக்கும் மென்பொருளை விண்டோஸ் 7, 8 மற்றும் 10 ஆகியவைஇயங்கும் லேப்டாப், டெப்லேட் மற்றும் கணினிகளில் தரவிறக்கம் செய்துபயன்படுத்திக்கொள்ள முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆபிஸ் 2013மென்பொருளை நீக்கிவிட்டு, இந்த புதிய மென்பொருளை உள்ளீடு செய்யவேண்டும்.இந்த முன்னோட்ட பதிப்பு பற்றி மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஆராய்ந்துஅடுத்து வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட மென்பொருளில் அவற்றைச் சேர்க்கநடவடிக்கை எடுக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை பிரிவு மேலாளர்ஜாரெட் ஸ்பாட்ரோ தெரிவித்துள்ளார்.ஆபிஸ் 2016 முன்னோட்ட வெர்சனை, https://products.office.com/en-us/office-2016-preview என்ற இணையதளத்தில்இருந்து தரவிறக்கம் செய்யலாம்.

BY,
TRICHY-GUNA

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி