மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா - வரும் 22 அல்லது 23-ம் தேதியன்று பதவியேற்பு விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2015

மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா - வரும் 22 அல்லது 23-ம் தேதியன்று பதவியேற்பு விழா


அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஜெயலலிதா வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலை வராக ஜெயலலிதா தேர்ந்தெடுக் கப்பட்டு, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருவார் என்று கூறப்படுகிறது. பதவியேற்பு விழா 22 அல்லது 23-ம் தேதி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இழந்தார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பதவியேற்றார்.தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நேற்று அறிவித்துள் ளார். சென்னைஅதிமுக தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை)காலை7 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.இக்கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்றும், பிறகு அவர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு வசதியாக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் 21-ம் தேதி ராஜினாமா செய்வார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.பதவியேற்பு விழா 22 அல்லது 23-ம் தேதி நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் 22-ம் தேதியன்றே முதல்வர் பதவியேற்பு விழாவும் நடக்க வாய்ப்பு உள்ளது. இதற்காகத்தான் காலை 7 மணிக்கு கூட்டம் நடத்தப் படுகிறது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநரிடம் முறைப்படி கடிதம் வழங்கப்படும்.22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நல்ல நாள் என்பதால், அன்று மாலை ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடத்தப்படலாம். இல்லாவிட்டால், மறுநாள் 23-ம் தேதி பதவியேற்பு விழா நடத்தப்படும்.

இவ்வாறு தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

புதிய அமைச்சரவையில், தற்போதுள்ள அமைச்சர்கள் சிலர் நீக்கப்பட்டு, புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி