'கவுன்சிலிங்' செல்வதற்குள் அசத்தலாக ஓர் 'TNEA COUNSELLOR ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2015

'கவுன்சிலிங்' செல்வதற்குள் அசத்தலாக ஓர் 'TNEA COUNSELLOR ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை


பிளஸ் 2 முடிவு வெளியானதும், இன்ஜி., துறையில் கால்பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் இருக்கும், ஒரே தலைவலி 'கவுன்சிலிங்'.'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்ப, எந்த கோர்ஸ், எந்த காலேஜில் கிடைக்கும் என்பதை அறியவே, ஒரு மாதமாகிவிடும்.
ஆனால், கோவையை சேர்ந்த பிளஸ் 2மாணவி, இதை ஒரு சில நொடிகளிலே தெரிவிக்கும் புதிய, 'ஸ்மார்ட்போன்' அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.வித்யா நிகேதன் பள்ளி மாணவியான பியோனா விக்டோரியா, பிளஸ் 2 முடித்து, தற்போதுஇன்ஜி., கவுன்சிலிங்குக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பா ஸ்டான்லி, அம்மாநிர்மலா, இருவரும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.தனது எட்டாம் வகுப்பு முதலே, புரோகிராமிங் குறித்த கோடை சிறப்பு வகுப்புக்கு சென்றுவரும் இவர், இந்த அப்ளிகேஷனை, மூன்று மணி நேரத்திலேயே, டிசைன் செய்து அசத்தியுள்ளார்.'தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலர்'(TNEA COUNSELLOR)எனும் இந்த மொபைல் அப்ளிகேஷன், கட் ஆப் கால்குலேட்டர், கவுன்சிலர் தேர்வு, விருப்ப தேர்வு போன்ற பயன்பாடுகளுடன்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முதலில் மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடுகிறது. பின், கட் ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ற பிரிவுகள், மாவட்ட முன்னுரிமை மற்றும் சமூக அடிப்படையில் எத்தனை கல்லுாரிகள், பரிந்துரைகள் உள்ளனஎன்பதை தெளிவாக காட்டுகிறது. இதில் துறை வாரியாக, 'கட் ஆப்' வாரியாக, மாவட்ட வாரியாக மற்றும் கல்லுாரி வாரியாக, பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் எங்கு, எப்படி, எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற யோசனைகளை முன்கூட்டியே பெறலாம். இதை மொபைல் மட்டுமின்றி, 'டேப்'களிலும், இணையதளம் வாயிலாகவும் பயன்படுத்தலாம்.இந்த அப்ளிகேஷன், அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் (வெர்சன் 4.2 அதற்கு மேல்) இலவசமாக கிடைக்கிறது.

'கூகுள் பிளே ஸ்டோர்' வாயிலாக, இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். மாணவி பியோனா விக்டோரியா கூறுகையில், ''சிறு வயதிலிருந்தே, 'சி புரோகிராமிங்' கற்பதில் ஆர்வம் அதிகம். பிளஸ் 2 தேர்வை எழுதி முடித்ததும்இந்த யோசனை வந்தது. ஆன்லைனில், எல்லா தகவலையும் சேகரித்தேன். வெறும் மூன்று மணி நேரத்தில், இந்த அப்ளிகேஷனை டிசைன் செய்து முடித்தேன்.''தேர்வு முடிவு வந்ததும், கட் ஆப் மதிப்பெண்ணுக்கு இன்ஜி., சீட் கிடைக்குமா என கவுன்சிலிங் வாயிலாக தெரியவே, எப்படியும் ஒரு மாதம் ஆகும். இந்த ஆப்ஸ், இதை முன்கூட்டியே சொல்லிவிடுவதால், பயனுள்ளதாக இருக்கும். கடந்த இரு வாரத்தில், ஆயிரக்கணக்கானோர், 'டவுண்லோடு' செய்துள்ளனர்,'' என, மகிழ்ச்சியுடன் கூறும், பியோனா விக்டோரியாவுக்கு எதிர்காலத்தில், சாப்ட்வேர் இன்ஜியரிங் துறையில் வெற்றிக்கொடி நாட்ட ஆசை! வாழ்த்துக்கள்!

2 comments:

  1. Excellent work congrats Miss.

    ReplyDelete
    Replies
    1. Excellent work congrats Miss.Piyano victoriya

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி